அசல் உரிமம் அவசியமில்லை:- நீதிபதி துரைசாமி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.வாகன ஓட்டிகள் அனைவரும், செப்டம்பர் 1 முதல், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இந்த உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். எனினும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதற்கிடையே, இன்று (செப்.1) முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. அதன்படி, அசல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார். மேலும், வாகன சட்டம் 139ன் படி அசல் வாகன உரிமத்தை வைத்திருப்பது அவசியமில்லை. இந்த விவகாரத்தில் திடீரென முடிவு எடுத்தது ஏன் என்று அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை இன்று மதியத்திற்கு மேல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக இதே வழக்கில், அரசின் உத்தரவில் தங்களால் தலையிட முடியாது என்றும், வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *