அணிகள் இணைகிறது? அதிமுகவில் ஆகஸ்ட் புரட்சி!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“ஆகஸ்ட் புரட்சிக்கு தயாராகிவிட்டார் டிடிவி.தினகரன். வரும் 4-ம் தேதி முக்கிய முடிவுகளை தினகரன் அறிவிக்கப் போகிறார் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கடந்த வாரத்தில் தினகரன் மாமியார் துக்க நிகழ்வு முடிந்த பிறகு, பெங்களூர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட சிலர் தினகரன் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.’நீங்க இனியும் எதும் பேசாமல் அமைதியா இருந்தால் நம்ம பக்கம் இருக்கிறவங்க ஒவ்வொர்த்தராக விலகி போக ஆரம்பிச்சுடுவாங்க. உங்க தலைவர் ஏன் அமைதியாவே இருக்காரு… என வெளியே கேட்கறவங்களுக்கும் எங்களால பதில் சொல்ல முடியல. அதனால் நீங்க ஏதாவது முடிவை அறிவிக்கணும். நடக்கிறது நம்ம ஆட்சிதான் என்று நீங்க சொல்லிட்டு இருக்கிறதால இது நம்ம ஆட்சி ஆகிடாது. அதிகாரத்துல இருக்கிற யாரும் நம்மை மதிக்கிறது கிடையாது. உங்களால் ஏதாவது நல்லது நடக்கும்னுதான் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உங்க பக்கம் இருக்காங்க. நீங்க எதாவது உறுதியான முடிவை அறிவிக்கணும். அப்போதான் எல்லோருக்கும் நம்பிக்கை வரும். இப்போ உங்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் எல்லோரையும் எடப்பாடி ஆட்கள் வேண்டா விருந்தாளி போலத்தான் நடத்துறாங்க. நீங்க கட்சி தலைமை அலுவலகத்தில் வந்து உட்காரணும். உங்களை உள்ளே விட முடியாதுன்னு யாரும் சொல்ல முடியாது. நீங்க தான் கட்சி என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்க..’ என்று சொல்லி இருக்கிறார்கள்.அதற்கு தினகரன், ‘ அதிமுக என்றால் அது நாமதான் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆட்சிக்கு நம்மால எந்த சிக்கலும் வரக் கூடாது. ஆட்சியை விமர்சனம் செய்யுற மாதிரி நான் எங்கேயும் பேச மாட்டேன். நீங்க யாரும் அப்படி பேசிட கூடாது. கட்சி ஆபீஸ்க்கு போறதுன்னா நாம போகலாம். நமக்கு இருக்கும் செல்வாக்கை காட்டலாம்!’ என்று சொன்னாராம். ஆனால், இதில் சிலருக்கு உடன்பாடு இல்லையாம். ‘ எடப்பாடிக்கு எதிரா நாலு வார்த்தையாவது பேசணும்’ என சொன்னார்களாம். ஆனாலும் தினகரன் அதற்கு சம்மதிக்கவே இல்லையாம்” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.எடப்பாடி தரப்பில் என்ன நினைக்கிறார்கள்?” என்ற கேள்வியும் ஃபேஸ்புக் கேட்டது. பதிலை அடுத்த மெசேஜ்ஜில் போட்டது வாட்ஸ் அப்.தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வரப் போகிறார் என்பது எடப்பாடி தரப்புக்கு தெரியாமல் இருக்குமா? எடப்பாடி அமைச்சர்களுடன் இது தொடர்பாக பேசினார். ‘அவரு வந்தால் கட்சி ஆபீஸ்க்குள்ள விடக் கூடாது. எல்லா ரூம்களையும் பூட்டி வைக்கணும். அவரு உள்ளே வந்துட்டா மறுபடியும் நம்மை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிருவாரு. இப்போ எல்லாமே நல்லாதானே போய்ட்டு இருக்கு. அவரை ஆதரிக்கிற எம்.எல்.ஏ.க்கள் யாரும் நம்மை எதிர்க்கலை. எதிர்க்கவும் மாட்டாங்க. காரணம், ஆட்சி கலைவதை யாரும் விரும்ப மாட்டாங்க…அதனால நாம தைரியமா பேசலாம்’ என ஜெயகுமார் சொன்னாராம். அமைச்சர் வேலுமணியோ, ‘அவரு வந்தால் வந்துட்டு போகட்டும். அவரு அங்கே வருவதால் எதும் ஆகிடாது.நாம தேவையில்லாமல் ஆபீஸை பூட்டினால் அவர்கள் வந்து பூட்டை உடைச்சாங்கன்னா அது பெரிய பிரச்னை ஆகும். மீடியாவுக்கு நாமே தீனி போட்ட மாதிரி ஆகிடும். அவர்கள் நோக்கம் ஆட்சியை கலைக்கிறது இல்ல. அப்புறம் என்னவோ பேசிட்டு போகட்டும். இதையெல்லாம் நாம பெருசா எடுத்துக்க தேவை இல்ல..’ என்று சொன்னாராம்.
எடப்பாடி கடைசியாக பேசும்போது, ‘அப்படி அவங்க கட்சி ஆபீஸ்க்குள்ளே வந்துட்டா நமக்கு சிக்கல்தான். பன்னீர் அணி நம்மோடு இணைந்து விட்டால் அவங்க அடங்கிடுவாங்க. அதனால அவங்களை இணைக்க என்ன வழியோ அதைப் பார்க்கலாம். இந்த விஷயங்களை சொல்லியே பன்ன்னீர்கிட்ட பேசுங்க… எனக்கு அதுதாம் சரியா வரும்னு தோணுது’ என்று சொல்ல… அமைச்சர்கள் பலரும் அதை ஆமோதித்து இருக்கிறார்கள்.உடனே இந்த விஷயம் பன்னீர் அணியில் உள்ள பாண்டியராஜனிடம் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘ அண்ணன்கிட்ட நான் பேசுறேன்’ என அவரும் உடனே கிளம்பிவிட்டார். எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்ட ஒரே விஷயம், ‘ இப்போது முதல்வர் எடப்பாடி தான். அதை விட்டுத்தர முடியாது. முதல்ல நீங்க உள்ளே வாங்க. என்ன செய்யணுமோ எல்லாமே செய்வோம்’ என்பதுதான். பாண்டியராஜன் தான் பன்னீர் டீமில் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். முதல்வர் தலைமையில் இன்று அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகும்!” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *