அண்ணாசாலையில் பேருந்து விபத்து: 8 பேர் காயம்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 3 ) காலை மாநகர பேருந்து ஒன்று அங்குள்ள பெயர் பலகை மீது மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே நோக்கி ‘18கே’ என்ற எண் கொண்ட மாநகர பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்து. பேருந்தை டிரைவர் ஏழுமலை ஓட்டினார். கண்டக்டர் இளங்கோவன் மற்றும் பயணிகள் சுமார் 50 பேர் பேருந்தில் இருந்தனர். இந்நிலையில் காலை 11 மணி அளவில் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாஸா அருகே வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் ஒன்று பேருந்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது. அப்போது இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். இதில், பேருந்து திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த வழிகாட்டிப் பெயர் பலகை இரும்பு தூண் மீது பலமாக மோதியது.இதில் பெயர் பலகைத் தூண் சாலையின் நடுவில் சரிந்து விழுந்தது. பேருந்தின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் ஏழுமலைக்கு தோள்பட்டை, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான மாநகர பேருந்தை அப்புறப்படுத்தினார்கள்.பின்னர் சாலையின் நடுவில் விழுந்த பெயர் பலகை இரும்பு தூணை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அண்ணா சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *