அதிக அதிகாரம் எங்களுக்கு தேவை;- நசீம் ஜைதி

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்,” என, தலைமை தேர்தல் கமிஷனர், நசீம் ஜைதி கூறினார். இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர், நசீம் ஜைதி, டில்லியில் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், நடு நிலையாகவும் செயல்படும் அமைப்பு. தேர்த லில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷன் ஒரு தலைபட்சமாக செயல் படுவதாக குற்றம்சாட்டுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிக்கு ஆதரவாக,தேர்தல் கமிஷ னின் நடவடிக்கைகள் இருப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன.தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மை மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அவர்களிடம் தகுந்த ஆதாரம் இருப்பதில்லை. இவ்வாறு,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் அரசியல் கட்சிகள் மீது, தேர்தல் கமிஷனே நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்.
எந்த ஒரு தனி நபரையோ, குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ தண்டிப்பதற்காக இந்த அதிகாரத்தை தேர்தல் கமிஷன் கேட்கவில்லை. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், நம்பகத் தன்மைக்கு எதிராக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படும் போது, அதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டிய நிலைஉள்ளது; இது, கோர்ட் நேரத்தையும் வீணடிக்கும் செயல்.எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறக்கணித்து, அதில் ஈடுபடும் நபர்கள், கட்சிகள் மீது, தேர்தல் கமிஷனே நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வழங்கும் வகையில் சட்டதிருத்தம் வழங்கக் கோரி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளோம்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 20க் கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக எழுந்துள்ள புகார் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதே போல், அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது குறித்து, இரு தரப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *