அதிக இண்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா!

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இன்றைய மக்களின் வாழ்க்கை இண்டர்நெட் இல்லாமல் விடிவதும் கிடையாது, முடிவதும் கிடையாது. இண்டர்நெட் வருகையையடுத்து, மக்களின் வேலைகள் மிக எளிதில் முடிவடைகின்றன. இதனுடைய நன்மைகள் ம் இருப்பதால், அதனுடைய பயனும் அதிகரித்து செல்கிறது. இந்நிலையில், உலக அளவில் 830 மில்லியன் இளைஞர்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துகின்றனர். அதில், 39 சதவிகித இளைஞர்கள் (320 மில்லியன்) இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு கழகம், மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 15 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்கள் இண்டர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் உள்ளனர்.குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் 35 சதவிகித இளைஞர்கள்( 15-24) இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இது வளர்ந்த நாடுகளில் 13 சதவிகிதமாக இருக்கிறது. 2012 -2017 ஆம் ஆண்டு இடையில் வளர்ச்சி குறைந்த நாடுகளில் மொபைல் பிராட்பேண்ட் சந்தாக்களின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளன. டிஜிட்டல் இணைப்பு வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், உலகளவில் பில்லியன் கணக்கான மக்களுக்கு தெரியாத தகவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் நிதி வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தி தருகிறது. மொபைல் பிராட்பேண்ட் சந்தா கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 20 சதவிகிதத்துக்கும் மேலாக வளர்ந்துள்ளன. இது உலகளவில் 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4.3 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஸ்டன் கன்சல்டிங் குரூப் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் தகவல்களை ஒருங்கிணைத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் ஊராட்சிகளில் வசிக்கின்றனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பெண்கள். இதில் 33 சதவிகிதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர். ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கில் ஏழு மாதங்களில் 10 கோடி பேர் இணைந்துள்ளனர். 2014-2016 ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் மக்களின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது 8 கோடி முதல் 9 கோடி மக்கள் வரை ஆன்லைனில் பொருட்கள் வாங்குகின்றனர். மேலும், இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் 850 மில்லியன் பேர் இண்டர்நெட் பயன்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *