அதிக போதைக்காக மதுவில் ரசாயன பவுடரை கலந்து குடித்த 4 பேர் உயிரிழந்தனர்.

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அதிக போதைக்காக மதுவில் ரசாயன பவுடரை கலந்து குடித்த 4 பேர் உயிரிழந்தனர்.பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் மதுக்கடையில் இருந்து வாங்கிய மதுவை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்று அருந்தியுள்ளனர். மேலும், அதிகளவு போதைக்காக மதுவில் ரசாயன பவுடரை அவர்கள் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு திருப்பிய பழனிச்சாமி என்பவர் வயிற்று எரிச்சல் அதிகமாக இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.மேலும் 4 பேர் வாந்தி எடுத்ததால் அவர்களை மருத்துவனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜய் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர்ழந்தார். இதேபோல் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த உத்திரகுமார், பச்சையப்பன் ஆகியோரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஏரியூர் போலீசார் நான்கு பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *