அதிமுகவை தம் வசம் ஒப்படைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் கெடு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

NEW DELHI, INDIA – APRIL 22: AIADMK leader T. T. V. Dinakaran arrives to appear before Delhi Police for questioning in connection with an alleged attempt to bribe an Election Commission official for retaining the ‘two leaves’ party symbol and the related money trail, at airport T3, on April 22, 2017 in New Delhi, India. (Photo by Ravi Choudhary/Hindustan Times via Getty Images)

விதித்துள்ளதாக அரசியல் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.சசிகலா குடும்பத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி, அ.தி.மு.க பொருளாளர் என சில பதவிகளைப் பெற்றவர் டி.டி.வி.தினகரன். ஜெயலலிதாவின் கோபத்தை உணர்ந்து நழுவல் அரசியல் செய்ததால், சசிகலாவின் மற்ற குடும்ப உறுப்பினர்களைப் போல கைது நடவடிக்கைக்கு அவர் ஆளானதில்லை. அவர் மீதான பெரா வழக்குகள் அனைத்தும் அவராகத் தேடிக் கொண்டதுதான்.அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில்தான் வெளி உலகில் தலைகாட்டத் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டபோது துணைப் பொதுச் செயலாளர் பதவியை எதிர்பார்த்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, கட்சி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துக் கொண்டார். அதன்பிறகு தன்னை ஒரு தலைவராக உருமாற்றும் வேலைகளில் ஆர்வம் செலுத்தினார் தினகரன். இதனை ரசிக்காத டெல்லி பா.ஜ.க, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கில் தினகரனைக் கைது செய்தது.அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் சில காலம் ஒதுங்கியிருந்தார் தினகரன். அது சாத்தியப்படாததால் தற்போது எம்.எல்.ஏக்களைத் திரட்டி பலத்தைக் காட்டினார். எதற்காக இப்படிச் செய்கிறார்? என எடப்பாடி தரப்பு இன்னமும் உணரவில்லையாம்.தினகரன் தரப்பை பொறுத்தவரையில் முதலில் அதிமுகவை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காமல் போனால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களைக் கொண்டே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முடிவில் இருக்கிறார். இதைத்தான் எடப்பாடிக்கு கெடு விதித்து சொல்லி அனுப்பியிருக்கிறாராம் தினகரன்.எடப்பாடியோ டெல்லி இருக்கும் வரையில் எங்களுக்கு கவலை இல்லை என தெம்பாக இருக்கிறாராம். தினகரனோ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாள் பார்த்து கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *