அதிமுக எம்எல்ஏக்களுக்கு சசிகலா அணி லஞ்சம் கொடுத்தது அம்பலம்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணியினர் பேரம் பேசியதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் சமீப காலமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் என அதிமுக பிரிந்த நிலையில் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலா தலைமையிலான எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரெசார்டில் தங்கவைத்து சசிகலா அணியினர் பேரம் பேசியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. கூவத்தூர் ரெசார்டில் இருந்து தப்பி வந்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோவை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக அதிமுக கட்சியில் அங்கம் வகிக்கும் கோவை சூலூர் எம்எல்ஏ ஆர்.கனகராஜ் இடம்பெற்றுள்ள வீடியோவும் வெளியாகியுள்ளது. இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்.ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் சசிகலா அணி 6 கோடி வரை பணம் கொடுக்க முன் வந்தது தெரியவந்துள்ளது. அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியாத பட்சத்தில் தங்க கட்டிகள் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்றும், மற்ற யாருக்கும் 1 கோடி கூட கிடைக்கவில்லை என்று மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.எம்எல்ஏ சரவணன் மூன் டிவி நிர்வாக இயக்குநருடன் கூவத்தூரில் நடந்தது குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கூவத்தூர் ரெசார்டில் நடந்தது குறித்து விளக்கமளித்துள்ளார். சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சசிகலா அணியினர் பணம் மற்றும் தங்கம் தருவதாக கூறினர் என்றும் வீடியோவில் பேசியுள்ளார்.
courtesy times now and moon tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *