அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, வெங்கய்யா நாயுடுவுடன் சந்திப்பு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரையை, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தமது இல்லத்திற்கு வரவழைத்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆதரவு கோரியுள்ளார்.
மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை இன்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இல்லத்திற்கு சென்றார். அப்போது இருவரும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ.க வேட்பாளரை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும் என்று தம்பிதுரையிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.இதimages (1)னிடையே, வெங்கய்யா நாயுடு உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தாம் நட்புரீதியாகவே மத்திய அமைச்சரை சந்தித்ததாகக் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை அதிமுக தலைமைக் கழகம்தான் முடிவுசெய்யும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் என்றும், அதிமுக ஆதரவு யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *