அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை புதிய சாதனை…..

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் நவீன தொழில்நுடபம் மூலம் மூளை கட்டிகளை அகற்றி புதிய சாதனை செய்யப்பட்டுள்ளது. அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை குழு இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒளிரும் தடங்களின் உதவியுடன் அதாவது, ப்ளூ ரெஸ்சென்ஸ் மூலம் அசாமை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு டென்னிஸ் பந்து அளவில் இருந்த மூளை கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சிகிச்சைக்கு முன்பாக இந்த சிறுமி மூளைக்கட்டியின் பாதிப்பால் நாள் ஒன்றுக்கு 4 முறை மயங்கி கீழே விழுந்துள்ளார். தற்போது இந்த சிறுமி பூரண குணமடைந்து எத்தகைய பாதிப்பும் இல்லாமல் உள்ளார்.
இந்த புதிய சாதனை குறித்து அப்போலோ மருத்துவமனையின் நியூரோ சர்ஜன் மருத்துவர் திரு. பாலமுருகன் விளக்கம் அளித்தார். இந்த சிகிச்சையின் போது தங்களது மருத்துவ குழுவினர் முழு அளவில் களம் இறங்கி பணி புரிந்தனர் என்றும் அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் திரு பாலமுருகன் கூறினார். இதுவரை உலகில் 7 பேர் மட்டுமே இந்த மூளைகட்டி பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் மருத்துவர் பாலமுருகன் தெரிவித்தார்

 • DSC00089
 • DSC00067
 • DSC00081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *