அமித் ஷா ஒன்றும் அவதார புருஷர் இல்லை: நாஞ்சில் சம்பத்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சுருட்ட வேண்டும் என்ற வேட்கையோடு இந்த இணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று நாஞ்சில் சம்பத் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இன்று (19.8.2017) சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை முன் வைத்தனர். அந்தக் கேள்விகளும் அவரது பதில்களும் இதோ:அமித் ஷா சென்னை வருவதற்குள் அதிமுக இணைப்பு நடக்கும் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், “அமித் ஷா ஒன்றும் அவதார புருஷர் இல்லை. தமிழகமும் குஜராத் இல்லை” என்றார். அதிமுக இணைப்பு யை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அதிகாரத்தில் இருப்பவர்கள் சுருட்ட வேண்டும் என்ற வேட்கையோடு இந்த இணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஓபிஎஸ் அணியினருக்கும் இதே நோக்கம்தான். சுயநலத்தின் அடிப்படையில் இணைய முயற்சிக்கிறார்கள். கிணற்றுத் தண்ணீரையே மக்களுக்குக் கொடுக்காத ஓபிஎஸ் நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தங்கள் அணியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, “நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன்” என்றவர், “வருகின்ற 23ஆம் தேதி ஆர்.கே நகரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அப்போது தமிழகமே வியக்கும் வண்ணம் தொண்டர்கள் வந்து சென்னையில் குவியப்போவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்” என்று கூறினார்.இந்த விழாவில் ஸ்லீப்பர் செல்கள் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டா என்ற கேள்வியைச் செய்தியாளர்கள் முன்வைத்தார்கள். “ஸ்லீப்பர் செல்களும் கலந்துகொள்ளும்” என்று கூறினார்.தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தும் ஒரு சொற்பதத்தை இப்படி அரசியலில் பயன்படுத்தலாமா என்றொரு செய்தியாளர் கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதில் கூறிய நாஞ்சில் சம்பத், “உவமையை உவமையாகத்தான் பார்க்க வேண்டும். ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே‘ என்று சொன்னால் காதில் ஒரு அவுன்ஸ் தேனை வாங்கி ஊற்றிக்கொள்ளக் கூடாது” என்றார்.ஒருவேளை அணிகள் இணைப்பு நடந்துவிட்டால் தங்கள் அணியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, “எங்கள் பாதை விரிவடையும். நாங்கள் நேராக முன்னேறிச் செல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும் ” என்றார். டிடிவி தினகரன் மீது 17 குற்றச்சாட்டுகளை அரசு விழாவில் தமிழக முதல்வர் முன்வைத்துள்ளாரே என்ற கேள்விக்கு, “ஒரு மாநில முதல்வர் அரசு விழாவில் பேசும் போது அரசியல் பேசக் கூடாது. ஆனால் அவரோ, ‘ எங்களை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது‘ என்று அரசு விழாவில் பேசுகிறார் முதல்வர். கதைகள் சொல்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்றார் நாஞ்சில் சம்பத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *