அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வாஷிங்டனில் அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.போர்ச்சுகலில் இருந்து அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடியை வாஷிங்டன் விமான நிலையத்தில் இந்தியத் தூதர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வில்லார்டு இன்டெர்காண்டினெண்டல் ஹோட்டலில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா, ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், வால்மார்ட் நிறுவனத் தலைவர் டாக் மெக்மில்லன், மாஸ்டர் கார்டு நிறுவனத்தி அஜய் பங்கா உள்ளிட்ட 21 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்காலம், எச்.1 பி விசா விவகாரம், மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு செய்வது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை முதன் முறையாக வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தங்களது உண்மையான நண்பர் பிரதமர் மோடியைச் சந்தித்து, முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதமான வரவேற்பிற்கு நன்றி என்றும், டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்த ஆவலாக இருப்பதாகவும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *