அமைச்சர் விஜயபாஸ்கர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது!-ராமதாஸ்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆகஸ்ட் 02 ஆம் தேதி நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளின் அடுத்தகட்டமாக அவரது சொத்துகள் அனைத்தையும் முடக்கி வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. வருமானவரித்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது.அதுமட்டுமின்றி, அடுத்தகட்ட விசாரணைக்காக வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறை அறிவிக்கை அனுப்பியுள்ளது. அமைச்சர் என்பவர் அன்றாடம் கோட்டைக்கு வந்தும், மக்களை நேரில் சந்தித்தும் மக்கள் பணியாற்ற வேண்டும்.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கருக்கோ வருமானவரித்துறை விசாரணைக்காக ஆஜராவது, அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள செல்வாக்கு படைத்தவர்களை சந்தித்துக் கெஞ்சுவது போன்ற பணிகளை செய்வதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கிறது. விசாரணையின் அடுத்தகட்டமாக விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடும். இப்படிப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடிப்பது முறையல்ல.அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட புகார் மட்டுமல்ல, மேலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது, மருத்துவமனைகளை மிரட்டி கையூட்டு வாங்கியது, முதலவரின் பொதுச்சுகாதாரத் திட்டத்தில் ஊழல் செய்தது எனப் பட்டியலிட முடியாத அளவுக்கு- புகார்கள் உள்ளன. எனவே, விஜயபாஸ்கர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *