அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20-ம் தேதி வரை தடை

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம், ஆட்சியை அகற்றும் நடவடிக்கையை தொடங்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வெற்றிவேல் தாக்கல் செய்த இந்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவதுடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.இதேபோல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிடுவதால், வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஸ்டாலின் தரப்பு எம்.எல்.ஏ.வும் இதே கருத்தை தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கட்கிழமை சென்னை வர உள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து மு.க.ஸ்டாலின், வெற்றிவேல் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சட்டமன்றத்தில் செப்டம்பர் 20-ம்தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார். ஆளுநரின் செயலர் மற்றும் பேரவை செயலரிடம் விளக்கம் கேட்டு புதன்கிழமை பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *