அரசு பேருந்துகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்;-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விரைவில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் ஜூலை 8ம் தேதி(இன்று) போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், ”நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசு பேருந்துகளில் படிப்படியாகக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.இதுபோல், கழிப்பறை வசதிகொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். மேலும், காற்று மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சோதனை ஓட்டமும் ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. இத்தகையப் பேருந்துகள் முதல்கட்டமாகச் சென்னையில் இயக்கப்படும்.தமிழ்நாட்டில் 74 புதிய பணிமனைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதில் 42 பணிமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படும். விரைவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.1250 கோடி நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் மீத தொகை முழுவதும் வழங்கப்படும். மேலும், சாலைப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். இதில், மாற்றங்கள் கொண்டு வரத் தமிழக அரசு முழு முயற்சி எடுக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *