அ.தி.மு.க. அமைச்சர் எம்.எல்.ஏ.க் களுடன் மாவட்ட வாரியாக முதல்வர் ஆலோசனை

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாவட்ட வாரியாக அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை சந்தித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட வாரியாக அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.காலை 11 மணிக்கு விழுப்புரம், கடலூர், திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தார். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களான சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் (காட்டு மன்னார்கோவில்), பாண்டியன் (சிதம்பரம்), பிரபு (கள்ளக்குறிச்சி), குமரகுரு (உளுந்தூர்பேட்டை) ஆகியோர் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்தனர். இதேபோல் திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் சென்று சந்தித்தனர்.அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு விரைவில் கூட இருப்பதால் அ.தி.மு.க.வில் உள்ள 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்துடன் பொதுக்குழு கூட்டம் நடந்தால்தான் அது செல்லுபடியாகும்.அதனால் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனி சாமி ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர் கூறினார். இதே போல் ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்கள் தலைமையில் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *