ஆட்சி கவிழவோ, இடைத்தேர்தல் வரவோ வாய்ப்பே இல்லை-துணை சபாநாயகர் தம்பிதுரை

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அதிமுக தனித்துவம் வாய்ந்த இயக்கம் என்பதால், ஆட்சி கவிழவோ, இடைத்தேர்தல் வரவோ வாய்ப்பே இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதிபட தெரிவித்துள்ளார்.மும்பை செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மறைந்த ஜெயலலிதா பாடுபட்டு நல்ல ஆட்சியை அமைத்துக் கொடுத்திருப்பதால், எந்த அதிமுக தொண்டனும் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்க மாட்டார் என்று தெரிவித்தார்.ஜனநாயக முறையில் கட்சியில், சில கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்த தம்பிதுரை, கட்சியை பொறுத்தளவில் எந்த பிளவும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *