ஆதார் எண் கட்டாயமில்லை -உச்சநீதிமன்றம்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆதார் எண் வைத்திருப்பவர்கள் பான் கார்டுடன் அந்த எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டு எண்ணை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆதார் எண்ணுடன், பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவித்தது.ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் மத்திய அரசு கூறியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது ஆதார் எண்ணை வைத்திருப்பவர்கள் அந்த எண்ணை பான் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் ஆதார் எண் இல்லாதவர்களிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு நிர்பந்தம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

aadhar-card_647_100715114757

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *