ஆதித்தனார் சிலையை 20-ம் தேதிக்குள் அதே இடத்தில் நிறுவ முதலமைச்சர் உத்தரவு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை எழும்பூரில் சி.பா. ஆதித்தனார் சிலையை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அதே இடத்தில் நிறுவும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எழும்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு அப்பகுதியை சீரமைத்து, சி.பா.ஆதித்தனார் சிலை அமைந்துள்ள பீடத்தை சுற்றியுள்ள போக்குவரத்துத் தீவை அழகுபடுத்தி, எழிலார்ந்த பகுதியாக மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, 29.12.2015 அன்று மாமன்றம் ஒப்புதல் வழங்கியது.இப்பணிக்காக ஒரு விரிவான வரைபடம் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 16.6.2017 அன்றுஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டார். ஆதித்தனார் சிலையை தினத்தந்தி நிறுவனமே இதுவரை பராமரித்தவந்ததனால்,இப்பணிகள் நிறைவடையும் வரை, சிலையை பாதுகாப்பாக வைப்பதற்கு 4.5.2017 அன்று தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தினரிடம் பெருநகர சென்னை மாநகராட்சியால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
26.5.2017 அன்று சிலை முறையாக அகற்றப்பட்டு தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்து தீவைப் மேம்படுத்தும் பணி 13.9.2017 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியால் துவக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *