ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு;- 9 பேர் உயிரிழப்பு

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று இரவு பாய்லர் வெடித்து சிதறிஉள்ளது. இதில் 9 பேர் பலியாகினர் எனவும் பலர் தீ காயம் அடைந்து உள்ளனர் எனவும் தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவை அடுத்து வங்காளதேசத்தின் ஆடைய தயாரிப்பு தொழிலானது மிகப்பெரியது, 4 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறது. ஆடை ஏற்றுமதியானது அந்நாட்டு ஏற்றுமதி வருவாயில் 80 சதவிதமாக உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு வங்காளதேசத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் 1,100க்கும் அதிமனோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு இதுபோன்று ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து நேரிட்டதில் 112 பேர் பலியாகினர். வங்காளதேசத்தில் இதுபோன்று தீ விபத்துக்களில் மக்கள் உயிரிழப்பு தொடர் சம்பவமாக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *