ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா?

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என விமர்சனங்களுக்கு பாஜக மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ் பின்னணி இருப்பதாலே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவார்கியா,ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என்று காட்டமாக பேசியுள்ளார்.பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா கூறியிருப்பதாவது:- “ ராம்நாத்கோவிந்த் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சினை? ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? ஒரு தேசியவாதி ஜனாதிபதியாக கிடைக்க இருக்கிறார் என்பதை நினைத்து நாடு பெருமைப்பட வேண்டும். தேநீர் வியாபாரம் செய்தவர் பிரதமராகவும் தலித் பின்னணி கொண்டவர் ஜனாதிபதி என்பது கனவு. சாதரண மனிதர்கள் மிகப்பெரும் உச்சத்தை எட்டியுள்ளனர்” என்றார்.ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாரதீய ஜனதா சார்பில் ஆலோசனை நடத்த மூன்று மத்திய மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி,வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய இந்த குழு சோனிய காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது.இந்kailasத நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்டதையடுத்து இது குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, ”பீகார் ஆளுநர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்கட்சிகளின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும்” என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *