ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகிறது : சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

Comments (0) அரசியல், இந்தியா, கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகிறது என்று சென்னையில் தமிழர் உரிமை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்இந்தித்திணிப்பை எதிர்த்தும், கீழடியைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தியாகி சங்கரலிங்கனார் வளாகத்தில் (காமராசர் அரங்கம், சென்னை) தமிழர் உரிமை மாநாடு எழுச்சியுடன் துவங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.பறை இசையுடன் மாநாட்டு தொடக்க நிகழ்வுகள் தொடங்கின. வேலு ஆசானின் சமர் கலைக்குழு, தமிழர் கலைக்கூடத்தில் வீரதீர சிலம்பம், மாற்று ஊடக மையத்தின் மண்ணின் கலைகள் என மாநாட்டில் கலந்தன.மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் மொழிச்சுடர்-பிடிமண் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குலவைச் சத்தம் ஒலிக்க கீழடியிலிருந்து தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் கொண்ட வந்த ‘பிடிமண்’ணை விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொண்டார்.சென்னை மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாணவர் சங்க மாநில துணைச்செயலாளர் க.நிருபன்சக்கரவர்த்தி ஏந்தி வந்த ‘நடராசன்-தாளமுத்து நினைவு மொழிச்சுடரை’ ஆய்வாளர் ஆழி செந்தில்நாதன் பெற்றுக் கொண்டார். மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.டி.கண்ணன் ஏந்தி வந்த ‘சிதம்பரம் ராசேந்திரன் நினைவு மொழிச்சுடரை’ பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பெற்றுக் கொண்டார்.மாணவர் சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஏந்தி வந்த ‘விராலிமலை சண்முகம் நினைவுச்சுடரை’ தமுஎகச நிர்வாகி முத்துநிலவனும், மாணவர் சங்கத் தலைவர் ம.அபர்ணா ஏந்தி வந்த ‘கீரனூர் முத்து நினைவுச்சுடரை’ கவிஞர் எரியீட்டியும் பெற்றுக் கொண்டனர்.இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை விளக்கும் வரலாற்றுக் கண்காட்சியை தமுஎகச துணைத்தலைவர் ஆர்.நீலாவும், கீழடி அகழாய்வுத் தொல்லியல் கண்காட்சியை தமுஎகச துணைத்தலைவர் என்.நன்மாறனும் திறந்துவைத்தனர். இக்கண்காட்சிகளை ஓவியர்கள் ஸ்ரீரசா, ராஜேந்திரகுமார் ஆகியோர் வடிவமைத்திருந்தனர். இந்நிகழ்வுகளை தமுஎக தலைவர்கள் எஸ்.கருணா, அ.லட்சுமிகாந்தன், வெ.இரவீந்திரபாரதி, மணிநாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.நடராசன் – தாளமுத்து நினைவரங்கில் ‘நம் போர் இன்னும் முடியவில்லை’ எனும் தலைப்பிலான பொதுமாநாட்டிற்கு தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழச்செல்வன் தலைமை தாங்கினார். தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் இரா.தெ.முத்து வரவேற்றார்.
இந்நிகழ்வில் விருதுநகரில் இருந்து தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தேனிவசந்தன் ஏந்தி வந்த ‘தியாகி சங்கரலிங்கனார் நினைவு மொழிச்சுடரை’, விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா பெற்றுக் கொண்டு உரையாற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து எழுத்தாளர் பிரபஞ்சன் துவக்கி வைத்துப் பேசினார். நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய சதியில் ஈடுபட்டு வருகிறது என்று சென்னையில் தமிழர் உரிமை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். மொழி எம்பது தொடர்புக்கான கருவிமட்டும் அல்ல சிந்தனைக்கான கருவி என்று கூறினார். ஒரு மொழியை மட்டுமே முன்னிறுத்துவதால் மொழி, இனம் சார்ந்த அடிமைத்தனம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *