ஆர்.கே.நகர் பணபட்டுவாடா தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக போலீசில் புகார் அளிக்க தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து பிரசாரத்தில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் வைரக்கண்ணு என்பவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பினார்அதற்கு பதிலளித்த ஆணையம், பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக போலீசில் புகார் அளிக்க தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
2017_3largeimg10_friday_2017_091603818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *