ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை பலி

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தெலங்கானாவின் எக்கரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகள் சின்னாரி (14 மாதம்). கடந்த வியாழக்கிழமை தனது சகோதரியுடன் வயலில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு 7.15 மணியளவில் திடீரென எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 450 அடி ஆழ போர்வெல்லில் குழந்தை தவறி விழுந்தது. உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குழந்தையின் அசைவுகளை கண்காணித்தனர். எனினும் குழந்தை உயிரிழந்தது. சுமார் 58 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணியின் முடிவில் குழந்தையின் சடலம் நேற்று காலை 6 மணியளவில் மீட்கப்பட்டது. இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *