ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்

Comments (0) இந்தியா, செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதியில் உலக தரவரிசையில் 11–வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்குடன் மல்லுகட்டினார். தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள சென் லாங்கிற்கு எதிராக இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் தோல்வியையே தழுவியிருந்தார். இன்று அதற்கு பதிலடி கொடுத்து பட்டத்தை வென்று உள்ளார்.போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற கணக்கில் சென் லாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஸ்ரீகாந்த், 4–ம் நிலை வீரரான சீனாவின் ஷி யுகியை 21–10, 21–14 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் வென்று இருக்கும் இரண்டாவது சர்வதேச பட்டம் இதுவாகும். முன்னதாக இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென் லாங், ஷி யுகியை வீழ்த்த சிறப்பான ஆட்டத்தை ஸ்ரீகாந்த் வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *