ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க திட்டத்தில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஒப்புதல்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அதானி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ரயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய முடிவு செய்தது.இதனால், குயின்ஸ்லாந்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அதானி குழுமம் கூறியுள்ள நிலையில், இந்த திட்டத்தால், புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளதாக கூறியுள்ள அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள திட்டங்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, ஒப்புதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனம் ஒன்று மிகப்பெரிய முதலீடு செய்ய இருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

gautam_adani 1--621x414

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *