ஆஸ்ரம் பள்ளி வதந்திகளை நம்ப வேண்டாம் : நிர்வாகம் விளக்கம்!

Comments (0) கல்வி, சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குறித்து வெளி வரும் தகவல்களையும், என்று பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.சென்னை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி குழுமத்தின் சார்பாக தி ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் செயலாளராக லதா ரஜினிகாந்த்,பதவி வகித்து வருகிறார். இந்த பள்ளி வெங்கடேஸ்வரலு என்பவரது நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. வாடகை முறையாகச் செலுத்தாததால் பள்ளி இழுத்து மூடப்பட்டதாகவும், அங்குப் பயின்ற மாணவர்கள் வேளச்சேரி கிளைக்கு மாற்றப்பட்டதாகவும்கூ
றப்படுகிறது.அதாவது, கடந்த 5 ஆண்டுகளாகப் பள்ளியின் கட்டடத்துக்கு வாடகை தரப்படவில்லை. சுமார் 10 கோடிரூபாய்க்கு மேல் வாடகை நிலுவையில் உள்ளது. வாடகை கேட்டுச் சென்றால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்று நிலத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு கூறுகிறார். மேலும் ஒரு முறை நிர்வாகம் சார்பில் செக் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று அவர் கூறுகிறார். பள்ளி இழுத்து மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், இதுகுறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து செயலாளர் லதா ரஜினிகாந்த் கூறியதாவது,”நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்ப தகராறு காரணமாக நாங்கள் அவரிடமிருந்து அதிகளவு தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல, இது ஒரு சுரண்டல். காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை நாங்கள் பேசிய தொகையை விட அதிகரித்துள்ளனர்.நாங்கள் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்து , அந்த இடத்தை காலி செய்வது குறித்து முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சனையை முடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *