இந்தியாவில் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பில்லை!-துணை ஜனாதிபதி பேச்சு

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நாட்டில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதென்று துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் இன்று ஆகஸ்ட் 1௦ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு நாளை ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்கிறார்.இந்நிலையில், மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு ஹமீத் அன்சாரி பேட்டியளித்தபோது இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், அதற்குப் பசு பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள், மாட்டிறைச்சி தடை, போற்றவைகளே காரணம் என்று கூறினார்.நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், அதன் அடிப்படைக்கே பாதிப்பு வருவதாக இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். அதையடுத்து, பதவி விலகும் நிலையில் ஹமீத் அன்சாரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி நிறைவு பெறுவதையடுத்து, பிரதமர் மோடி இன்று ஆகஸ்ட் 1௦ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாழ்த்திப் பேசுகையில், ஹமீத் அன்சாரி தனது பதவி காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், சிறந்த ராஜதந்திரியாகவும் அவர் பணிபுரிந்துள்ளார். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களைக் கற்றுள்ளேன் என்று பாராட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *