இந்தியாவை உலக சாதனையுடன் படுபயங்கரமாக பழிதீர்த்த பாகிஸ்தான்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்.இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்து மிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அசார் அலி (59), பஹார் (114), பாபர் (46), ஹபீஸ் (57*) ஆகியோர் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிகரன்கள் சேர்த்த அணி என்ற பெருமை பெற்றது பாகிஸ்தான்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஐசிசி தொடரின் பைனல்களில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.இதற்கு முன் கடந்த 2003ல் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் பைனலில், ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.264595

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *