இந்தியா – பூட்டான் வர்த்தக ஒப்பந்தம்!

Comments (0) உலகம், செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் கையெழுத்தான பூட்டான் நாட்டுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தமானது ஜூலை 29 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புதிய ஒப்பந்தம் வாயிலாக இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு வலுப்பெறுகிறது. கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தமானது ஜூலை 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் இந்தப் புதிய ஒப்பந்தம் வாயிலாகவே கையாளப்படும். மேலும் வரியற்ற வர்த்தகப் போக்குவரத்து இந்த ஒப்பந்தம் வாயிலாகச் சாத்தியமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இப்புதிய ஒப்பந்தத்துக்கு முன்னர் 2006ஆம் ஆண்டின் ஜூலை 29ஆம் தேதி தொடங்கிய ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. 10 ஆண்டுக் காலம் நீடித்த அந்த ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பு 750.02 மில்லியன் டாலர்களாக இருந்தது. அது 2016-17 நிதியாண்டில் 808.72 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *