இந்திய எல்லையில் சீன ராணுவம் போர் டாங்கிகளை கொண்டு ஒத்திகை

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்திய எல்லையில் சீன ராணுவம் போர் டாங்கிகளை கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.இந்திய எல்லை அருகே திபெத் பகுதியில் சிறியரக போர் டாங்கிகளை கொண்டு சீன ராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது.
35- t டாங்கிகளை கொண்டு சீன ரானுவம் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவம் செய்தித் தொடர்பாளர் கொல் வு கியான் கூறிஉள்ளார்.திபெத் பகுதியில் புதிய ரக டாங்கிகளை கொண்டு சீன ராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளதா? என கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்து உள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக இந்த ஒத்திகையானது நடத்தப்படுகிறதா? என கேள்விக்கு கியான் பதிலளிக்கையில், உபகரணங்களை பரிசோதனை செய்வததுதான் ஒத்திகையின் நோக்கமாகும். எந்தஒரு நாட்டையும் இலக்காக கொண்டு பரிசோதனையானது நடைபெறவில்லை என குறிப்பிட்டு உள்ளார்.சீனா – இந்தியா – பூடான் எல்லையின் மையப்பகுதியாக உள்ள டோக் லாம் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு உள்ளது. இந்திய ராணுவத்தின் பதுங்குக்குழியை சீன ராணுவம் அழித்து உள்ளது, பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாடு இந்தியாவுடன் மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர் கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வதை சீன ராணுவம் தடுத்து உள்ளது.எல்லையில் சீன ராணுவம் சாலை கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு பூடான் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது. இந்திய ராணுவமும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *