இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா

Comments (0) இந்தியா, செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமித்தது. இவர் ஓராண்டு காலம் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இன்றுடன் கும்ப்ளேவின் பயிற்சியாளர் ஒப்பந்த காலம் நிறைவு பெற்றது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது கோலியுடன் கும்ப்ளேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி வரை அனில் கும்ப்ளே நீடிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8download வருடங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து கும்ப்ளே ஓய்வு பெற்றார். கடந்த 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கும்ப்ளேவுக்கு தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் கட்டுப்போட்டபடி 14 ஓவர்கள் வீசிய அவர் மதிப்பு வாய்ந்த பிரையன் லாராவின் விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *