இந்திய பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு, எல்லையில் பதற்றம்

Comments (0) இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சீனா – இந்தியா எல்லையில் பாதுகாப்பு அளித்துவரும் இந்திய ராணுவம் – சீன ராணுவம் இடையே ஒரு மோதலான போக்கு ஏற்பட்டு உள்ளது.பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. சீன ராணுவம் அவ்வபோது இந்திய நிலைகளுக்கு ஊடுருவதும், இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் முன்னதாக நிகழ்ந்து உள்ளது. இவ்வரிசையில் சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளது.சிக்கிமின் தோகா லா பகுதியில் இந்த மோதலான போக்கானது கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வருவதாக தெரிகிறது. கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மேலும் முன்னேறி வராமல் தடுக்க இந்திய ராணுவம் கடினமாக போராடி வருகிறது. சீன ராணுவத்தை தடுக்க இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஒரு மனித சங்கிலியை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவம் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து உள்ளது, போட்டோக்களையும் எடுத்து உள்ளது. தோகா லா பகுதியில் இரண்டு பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டு உள்ளது. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே கடந்த 20-ம் தேதி கொடி கூட்டம் நடந்து உள்ளது, ஆனால் கூட்டத்தில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. தோகா லா பகுதியில் சீன ராணுவம் இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. தோகா லா பகுதியானது சிக்கிம், பூடான் – திபெத்தை எல்லையில் அமைந்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழியை அழித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே டைம்ஸ்-ஆப்-இந்தியா எல்லையில் நடந்த சம்பவம் என வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் முன்னோக்கி வரும் சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் கையால் தடுத்து நிறுத்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. சீன ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் வீடியோவில் சம்பவங்களை படம் பிடிக்கிறார்கள். மேலும் புகைப்படம் எடுக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை பிடித்துக் கொண்டு, சீன எல்லையை நோக்கி தள்ளுகிறார்கள். இந்த வீடியோவின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்படவில்லை என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *