இமாமை கன்னத்தில் அறைந்த பஜ்ரங் தள தொண்டர்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மசூதி முன் நடைபெற்ற போராட்டத்தின் போது இமாமை கன்னத்தில் அறைந்த பஜ்ரங் தள தொண்டர் இந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பஜ்ரங் தளம் சார்பில் அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டத்தில் உள்ள லாஹொரியா சவுக் மசூதி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அந்த மசூதியின் இமாம் முமகது யாசீனை கன்னத்தில் அறைந்து உள்ளார். பின்னர் அவரை அடித்து கீழே தள்ளி உள்ளார்.அந்த நபர் யாசீனை வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என கூற சொல்லி கட்டாயபடுத்தி உள்ளார். அவர் மறுக்கவே அவரை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.இது குறித்து உள்ளூர் வியாபாரிகளின் சங்கம் போலீசில் புகார் அளித்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *