இயக்குநரை இழந்துவிட்டோம்:- கௌதம் மேனன்

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இறைவி திரைப்படம் மூலம் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். திகில் கலந்த காமெடி படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால், வெளியீடு தள்ளிப்போனது.இதனிடையே எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் புதிதாக தயாராகவுள்ள இறவாக்காலம் திரைப்படத்தின் டீசர் நேற்று (ஆகஸ்டு 3) வெளியானது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் என்.முரளி ராமசாமி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவாடா இணைந்து நடித்துள்ளனர். மாயா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். மாயா திரைப்படத்தில் தன் பின்னணி இசையில் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் ரான் ஈதன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.டார்லிங் 2 படத்திற்குப் பிறகு விஜய் கார்த்திக் கண்ணன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இறவாக்காலம் திரைப்படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகராக எஸ்.ஜே.சூர்யா வருவார் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது. இதன் சான்றாக இயக்குநர் கௌதம் மேனன் தன் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் சினிமா ஒரு இயக்குநரை இழந்துவிட்டது, ஆனால் ஒரு நல்ல நடிகரைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த டீஸரை போல், இறவாக்காலம் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *