இரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்கள் தாக்கலுக்கு காலக்கெடு முடிந்தது

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி அ.தி.மு.க. அணியினர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. லட்சக்கணக்கில் குவிந்த பத்திரங்களை பார்த்து தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் திகைப்பு அடைந்தனர்.அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்ததால் அந்த கட்சியின் இரட்டை இலை சின்னம் தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்டு உள்ளது. சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷன் உத்தரவின் அடிப்படையில் இரு அணியினரும் டெல்லியில் உள்ள தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் பிரமாண பத்திரங்களை போட்டி போட்டு தாக்கல் செய்து வந்தனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கான ‘கெடு’ நேற்றுடன் முடிவடைந்தது.கடைசி நாளான நேற்று, இரு அணியினரும் ஒரே நேரத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் ஒரு மினி லாரி, 2 கார்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 173 பிரமாண பத்திரங்களை எடுத்து வந்து தாக்கல் செய்தனர். வக்கீல் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர் இதற்காக வந்திருந்தனர்.முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் வக்கீல் பாபு உள்ளிட்டோர் 20 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் ஏற்கனவே 3 லட்சத்து 98 ஆயிரத்து 632 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களுடன் சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 805 பத்திரங்கள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களுடன் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரம் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.இதற்கிடையே, தீபா பேரவையினர் 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.இந115035-leaf-png்த பிரமாண பத்திரங்கள் தாக்கலில் அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு பத்திரச்செலவு மட்டும் ரூ.1 கோடியே 36 லட்சத்து 56 ஆயிரத்து 100 ஆகும். அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு ரூ.76 லட்சம் பத்திரச்செலவு ஆகி இருக்கிறது. தீபா அணிக்கு ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் செலவாகி இருக்கிறது.பிரமாண பத்திரங்கள் லாரி, லாரியாக எடுத்து வரப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்யப்பட்டதைப் பார்த்து தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் திகைத்து விட்டனர். ஏன்தான் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய சொன்னோமோ? என்று எண்ணும் அளவுக்கு பிரமாண பத்திரங்களின் தாக்கல் நிகழ்வுகள் இருந்தன. இது மட்டும் இன்றி அந்த பத்திரங்களை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் எங்கு வைப்பது? என்ற குழப்பமும் ஏற்பட்டது.
இதற்கிடையே பிரமாண பத்திரங்கள் தாக்கலுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பிரமாண பத்திரங்களுடன் பொருளடக்க குறிப்பையும் (இன்டெக்ஸ்) அந்தந்த அணியினர் தேர்தல் கமி‌ஷனிடம் ஒப்படைத்து உள்ளனர்.லட்சக்கணக்கில் பிரமாண பத்திரங்கள் குவிந்து விட்டதால் அவை ஒவ்வொன்றையும் ஆராய தேர்தல் கமி‌ஷன் நேரம் ஒதுக்குமா? என்பது சந்தேகம்தான் எனவும், பொருளடக்க குறிப்பை ஆராய்ந்து, அதில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரமாண பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.பிரமாண பத்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அணியினரை நேரில் அழைத்து வாதம் செய்ய வைத்து, அதன்பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *