இரவில் தெளிவாக படம் பிடிக்கும் டெக்னோ போன்கள் அறிமுகம்

Comments (0) Uncategorized, இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • i5-pro
 • tecno_i7
 • DSC00028
 • Tecno-i5-Pro
இரவுநேரங்களில் மிக தெளிவாக படம் பிடிக்கும்டெக்னோ நிறுவன புதிய ரக போன்கள் சென்னையில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. உலகளாவியமுறையில் சிந்தனைசெய் .அதனை உள்ளூர் நலனுக்காக பயன்படுத்து என்ற முறையில் இந்தியாவில் உள்ள 15மாநிலங்களில் டெக்னோநிறுவனம் தனது தயாரிப்புகளை அறிமுகம்செய்து விற்பனைக்கு வழங்கியுள்ளது. அதன்அடிப்படையில்இரவுநேரங்களிலும் மிக இருட்டான இடத்தில் தெளிவானமுறையில் புகைப்படம் எடுக்கும் புதிய ஐ-3, ஐ-5 மற்றும் ஐ-7 செல்பேசிகளை டெக்னோ நிறுவனம் களம் இறக்கியுள்ளது.இந்தபுதிய போன்களின் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது.இதில் டெக்னோ போன் நிறுவத்தின் செயல் அலுவலர் அனிஷ் கபூர் புதியசெல்பேசியின் அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.அப்போதுதங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு தென் இந்தியாவில் பலமாக காலூன்றி உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துஇருப்பதாக கூறினார். பூர்விகா நிறுவனத்தின் முதன்மைசெயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில் தமிழகத்தில்43நகரங்களில் 250-க்கும் அதிகமான கடைகளுன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.தற்போது டெக்னோ போன்களை விற்பதில் முன்னிலை படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.தங்களது அனைத்து கடைகளிலும் டெக்னோவின் புதிய ரக போன்கள் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து இருப்பதாக தெரிவித்தார் டெக்னோ நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இதன் ஒட்டு மொத்த விற்பனை அளவு 120மில்லியன்யூனிட்டாக உள்ளது.ஆப்ரிக்கா மற்றும் இதர உலக நாடுகளில் முதல்முன்னணி செல்போன் நிறுவனமாக டெக்னோ போன் திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *