இறுதிபோட்டி ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி போட்டி ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ‘டாப்-8’ நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.கடந்த 12-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறின.கடந்த 14-ந் தேதி நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 15-ந் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான இந்தப் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா – சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.தொழில்நுட்பம் உதவி மற்றும் சூதாட்டம் இங்கிலாந்து சட்டப்பூர்வமாக இருப்பதால் எந்த் அணி வெல்லும் என சூதாட்டம் சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு கூறி உள்ளது.இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக கிடைக்குமாம். அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக கொடுக்கப்படுமாம்.எனவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என பெட் கட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயற்சிப்பர். இந்தியா மீது அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் தந்திரங்களை பயன்படுத்துவர். அப்படி செய்வதுதான் தரகர்களுக்கு லாபம் என்பது காரணம்.கிரிக்கெட் வீரர்கள் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.இந201706171323135944_Rs-2000-crore-bet-on-IndiaPak-title-clash_SECVPF்தியா விளையாடும் போட்டிகள் மீது ஓராண்டுக்கு கட்டப்படும் சூதாட்டத் தொகை அளவு 2 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என ஒரு கணக்கீடு கூறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதினால்தான் ஐசிசி, பிசிசிஐ மட்டுமின்றி சூதாட்ட தரகர்களும் பணத்தை அள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *