இவன் தந்திரன்-விமர்சனம்

Comments (0) சினிமா, விமர்சனம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

செய்த வேலைக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிய அமைச்சரின் பதவி இழப்புக்கு காரணமாக இருக்கும் இளைஞனின் கதை. படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு , சென்னை ரிச்சி தெருவில் செல்போன் கடை வைத்திருக்கும் கவுதம் கார்த்திக் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி, பிராண்ட் மாடல்களை அப்படியே நகலெடுத்துத் தரும் ரிவர்ஸ் எஞ்சினியர்களாக வலம் வருகிறார்கள். அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் சிசி டிவி பொருத்துவதற்கான அழைப்பு வருகிறது. வேலை முடிகிறது. அமைச்சரைப்பற்றி கவுதம் அடித்த கமென்ட், மருமகன் காதில் விழுகிறது. சம்பளம் தரமுடியாது, அப்புறம் வா என விரட்டியடிக்கிறார். பலமுறை முயன்றும் பலன் இல்லை. அமைச்சரைப் பழி வாங்குவதற்காக கவுதம் செதுக்கும் ஆப்புகள்தான் திரைக்கதை.இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை நெருங்கி வந்திருக்கிறார் கவுதம். ஷ்ரத்தாவுடன் காதல், அமைச்சருடன் மோதல் என ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். ‘என் காசை வாங்காம போகமாட்டேன்’ என அதிகார வர்க்க பங்களாவுக்குள்ளேயே அடம்பிடித்து, கட்டணம் கட்ட இயலாத கல்லூரி மாணவனுக்காக சிரமப்படுவது, அமைச்சரின் ஊழல் பணத்தைக் கண்டுபிடிக்க ஜி.பி.ஆர்.எஸ் ஏவுவது என நிறைவாக செய்திருக்கிறார்.கவுதமிடம் லேப்டாப் வாங்கி ஏமாந்துபோய், அவரையே காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா. பெங்களூரு நேர்முகத்தேர்வில் அவர் அளிக்கும் பதில்கள் செமயான காதல் விளையாட்டு.சூப்பர் சுப்பராயன் அமர்க்களப்படுத்துகிறார். கோட்டா சீனிவாசராவை நினைவூட்டுகிறார். பதவி பறிபோனதற்கு காரணமானவர்களை கொலைவெறியோடு பந்தாடி சபாஷ் பெறுகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கண்களாலும் குரலாலும் மிரட்டி, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா அளவோடு புகுந்து விளையாடுகிறது. எஸ்.தமன் இசையில் ‘டிகாலிட்டி’ பாடல் பிரபலமான ரிச்சி ஸ்ட்ரீட்டின் பெருமை பேசுகிறது. ‘என்ன மிதக்க விட்ட’ பாடல் மெலடி.

 • ivan-thanthiran_640x480_81496665652
 • NTLRG_20161014144735678002
பொறியியல் கல்லூரிகளில் சரியான கட்டுமானம் இல்லாமல், கட்டணத்தை மட்டும் கொள்ளையடிக்கும் அவலத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ‘மூன்றாம் வகுப்பு தாண்டாத நீயெல்லாம் அமைச்சராகி கோடி கோடியா கொள்ளையடிப்ப, எஞ்சினியரிங் படிச்ச நாங்க பிச்சை எடுக்கணுமா’, ‘ஓலா, ஊபர் எல்லாம் வந்ததுக்கப்புறம் சவாரி குறைஞ்சிருச்சில்ல’ என ஆட்டோக்காரர்களைக் கலாய்ப்பது என அங்கங்கே வசனம் ‘உள்ளேன் ஐயா’ சொல்கிறது.கருத்துநிறைக் கதையை கவனமாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *