உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கன மழை

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உத்தர ரதேசத்தில் லக்னோ உட்பட 10 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கங்கா, யமுனா, சார்யூ, மற்றும் காக்ரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நதிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதால், நதியோரம் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நகரங்களின் சாலைகள் மற்றும் தெருவீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *