உயர்சிறப்பு பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகளை தமிழகமே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயர்சிறப்பு பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகளை தமிழகமே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எம்.எஸ்., எ.டி. ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகள் பயின்றவர்கள் மேற்படிப்பு பயில்வதற்கான கலந்தாய்வு, தேர்வுகள் போன்ற நடைமுறைகளை மாநில அரசுகளே நடத்தின. இந்நிலையில், கடந்த மே மாதம் ஆணை ஒன்றை பிறப்பித்த மத்திய அரசு, இந்த நடைமுறைகளை இனி மத்திய அரசே நடத்தும் என அறிவித்தது. அதன்படி, கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் தேர்வுகள் நடந்தன. இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், இந்த புதிய முறையால் தமிழக மருத்துவர்களின் உயர்சிறப்பு பட்டமேற்படிப்புக்கான இடங்கள் குறையும் என்றார். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசை அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *