உர மானியத்துக்கு 2 லட்சம் ஸ்வைப்பிங் மெஷின்கள்!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உரங்களுக்கான மானியத்தை வழங்க சுமார் இரண்டு லட்சம் பி.ஓ.எஸ் கருவிகள் (ஸ்வைப்பிங் மெஷின்கள்) பொருத்தப்பட்டுள்ளன.நாடு முழுவதும் மார்ச் 31, 2018ஆம் தேதிக்குள் உரங்களுக்கான மானியத்தின் பலன்களை நேரடியாக வழங்க சுமார் இரண்டு லட்சம் பி.ஓ.எஸ் எனப்படும் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை உரங்களுக்கான மத்திய இணையமைச்சர் மன்சுக் மண்டவியா ஜூலை 1ஆம் தேதி மக்களவையில் தெரிவித்தார். மக்களவையின் கேள்வி நேரத்தில் அமைச்சர் மன்சுக் மண்டவியா பதிலளிக்கையில், “உரங்களுக்கான மானியத்தின் பலன்களை வழங்க இரண்டு லட்சம் நிலையங்களுக்கும் பி.ஓ.எஸ் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆதார் அட்டை, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களைக் கொண்டு வந்து விவசாயிகள் தங்களுக்கான பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் உரங்களின் விற்பனைக்கு ஏற்ப உர உற்பத்தி நிறுவனங்களுக்கு 100 சதவிகித மானியமும் வழங்கப்படும். ஆதார் மூலம் பயனாளிகள் பற்றிய தகவல்களை சேகரிப்பது, மண் வள அட்டைகளை வழங்குவது, சத்துகளை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் மானியங்களைச் சேமிப்பது போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளது” என்று அவர் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டு

 • 1501592208
 • Evening-Tamil-News-Paper_10723078251
உரங்களுக்கு மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்ய சுமார் 70,000 கோடி ரூபாயை மானியத் தொகையாக அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *