உலகம் முழுவதும் புனித ரமலான் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது.இஸ்லாமியப் பெருமக்களின் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் நற்பண்புகளின் கொண்டாட்டம்தான் ரம்ஜான் பண்டிகை. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, மாத இறுதியில், ஈகைத் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலிலுள்ள பள்ளிவாசலில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். இதேபோல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை செய்தனர். அப்போது, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆரத் தழுவிக் கொண்டும், இனிப்புகளைக் கொடுத்தும் தங்களின் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர். .
இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி ஆரத் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இன்று தொழுகையில் பங்கேற்றனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *