உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்

Comments (0) இந்தியா, சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் டாப் 100 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஷாருக்கான் ரூ.245 கோடி சம்பளம் பெற்று ஃபோர்ப்ஸ் பட்டியலில் 65வது இடத்தை பிடித்துள்ளார். சல்மான் கான் ரூ.238 கோடியுடன் 71வது இடத்திலும், அக்ஷய் குமார் ரூ. 228 கோடியுடன் 80வது இடத்திலும் உள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்த 100 திரையுலக நட்சத்திரங்களின் பட்டியல், ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான நடிகர்களின் வரிக்கு முந்தைய வருமானத்தை கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. நீல்சன், போல்லஸ்டார் மற்றும் ஐஎம்டிபி ஆகியவற்றின் எண்ணிக்கையையும், தொழில் நிபுணர்களின் நேர்காணல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஃபோர்ப்ஸின் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. Shahrukh-Khan-Most-Romantic-Movies-And-Dialogues-Download-Cover-Photosஃபோர்ப்ஸின் 100 திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலில் 66% பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல், ஐரோப்பாவில் இருந்து 20% நட்சத்திரங்களும், கனடாவில் இருந்து 12% நட்சத்திரங்களும், 5% ஆசிய நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *