ஊடகங்களுக்கு சவால்;ஹெச்.ராஜா

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை என பாஜக தேசிய செயலார் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.திருச்சி மண்டலம் சார்பாக கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், ‘இணைவோம் அனைவரும் வளர்வோம்’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஹெச். ராஜா, ‘திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர்களுக்கு பிரதமரை விமர்சிக்க எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்கு புறம்பாக பிரதமரை விமர்சித்து பேசும் திருமாவளவனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.மேலும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாமல் செயல்படுத்தினால், அந்த திட்டங்களை தடுத்து நிறுத்துவோம் என்றும், தமிழகம் முழுவதையும் பாலைவனமாக்கிய திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழர்களின் விடிவு காலம் உள்ளதாகவும் பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி மக்களோட வங்கிக் கணக்கில் பணம் போடுவதாக எப்போதும் சொல்லவே இல்லை என்று சாதித்த ஹெச்.ராஜா, அப்படி அவர் சொன்னதாக யாரும் நிரூபித்தால், தான் அரசியலைவிட்டே போய்விடுகிறேன். நிரூபிக்க முடியலைன்னா, நீங்க மீடியா வேலையை விட்டு போகத் தயாரா?’ என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஊடகங்களுக்கு சவால் விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *