என்னிடம் 5 கோடி பேரம் !:-எம்.எல்.ஏ சண்முகநாதன்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகுவதற்கு, எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பிலிருந்து 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக பன்னீர் அணி எம்.எல்.ஏ சண்முகநாதன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இரு அணிகளையும் இணைக்க கடந்த ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலையிலேயே பன்னீர் அணியின் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக அமைச்சர்கள் இரு அணிகளும் இணைய வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால் இதை பன்னீர்செல்வம் அணியினர் மறுத்துவிட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் ‘தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை’ என்று கூறி கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பன்னீர் அணியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், இன்று(ஆகஸ்ட்-3) தூத்துக்குடியில் தொழிற்சங்கம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பன்னீர் அணியைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன்,’ தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெறவில்லை என்று, கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை ‘என்று தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’ எடப்பாடி பழனிசாமி, தினகரன் என இரு தரப்பிலிருந்தும் என்னிடம் 5 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர். என்ன வேண்டுமானாலும் தருவதாகவும் கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பன்னீர்செல்வத்தை பொருளாளர் என்றும், மதுசூதனனை அவைத்தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் என்றும், தினகரனை துணைப் பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து அவர்கள் நாடகம் ஆடுவது தெரிகிறது. கூவத்தூரில் நடைபெற்ற பேரம்தான் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை அங்கிருந்து தப்பிவந்த எம்.எல்.ஏ சரவணனே கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்ததால்தான் 122 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கின்றனர். நிரூபிக்க முடியாத வகையில் அவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *