என்னை அழித்தாலும், பாரதீய ஜனதா மற்றும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னரே ஓய்வு,”-லாலு பிரசாத் யாதவ்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாரதீய ஜனதாவை ஆட்சியை விட்டு அகற்றிய பின்னரே ஓய்வு என பேசிஉள்ளார்.
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்த போது ஓட்டல்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்து 12 இடங்களியில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு உள்ளது. பாரதீய ஜனதாவின் சதிதிட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய குடும்பத்தார் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பாரதீய ஜனதாவிற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என்றார்.இந்நிலையில் பாரதீய ஜனதாவை ஆட்சியை விட்டு அகற்றிய பின்னரே ஓய்வு என லாலு பிரசாத் யாதவ் பேசிஉள்ளார்.2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த ஒரு மகா கூட்டணிக்கு லாலு அழைப்பு விடுத்திருந்தார். முலாயம் சிங் யாதவ், மயாவதி ஒன்றாக கைகோர்க்க வேண்டும், காங்கிரஸில் மாற்றம் என்றெல்லாம் பேசினார். இந்நிலையில் சோதனை அதிரடியாக நடத்தப்பட்டு உள்ளது. தன்னுடைய குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ள லாலு, மோடி அரசு தன்னுடைய குடும்பத்தை வேட்டையாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.லாலு பேசுகையில், “சிபிஐ ஏன் சோதனையில் ஈடுபட்டு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை அழித்தாலும், பாரதீய ஜனதா மற்றும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னரே ஓய்வு,” என பேசிஉள்ளார். பாரதீய ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் காரணமாகவே என்னை இலக்காக்குகிறார்கள். எனுக்கும் என்னுடைய குடும்பத்திற்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கும் செயல் நடக்கிறது, என்னுடைய எதிரிகள் என்னை சிறைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள்.
பாரதீய ஜனதா முன்னதாக நான் மண்டியிட செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் எனவும் கூறிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *