எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா?[-உயர்நீதிமன்ற கேள்வி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மக்கள் வறுமையால் வாடும் நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த ஜூலை 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து, 1லட்சத்து 5ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.இதையெதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்,’ தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியால் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயமும் பொய்த்துபோய் உள்ளது, இதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழக அரசு ஏற்கனவே கடனில் உள்ளது. இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதை நிறுத்திவைக்க தமிழக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இன்று (ஆகஸ்ட்-4) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,’தற்போதைய நிலையில் தமிழகம் வறட்சியால் தவித்துக்கொண்டிருக்க எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விவசாயிகள் தற்கொலை, மீனவர்கள் கைது, கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் மக்கள் தவித்துக்கொண்டிக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா? என்பது குறித்து எம்.எல்.ஏ-க்கள் சிந்திக்க வேண்டும்.’ என்று கூறினார்.மேலும் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *