எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்துவதா?: ஈஸ்வரன் கண்டனம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில் எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 2 மடங்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது,என்று

ரிவித்துள்ளார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் மற்றும் தொழில்துறை முடக்கம் உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை ரூ.55 ஆயிரத்திலிருந்து 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமலும், ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவிற்காக போராடி கொண்டிருக்கின்ற நிலையில் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் நலனை மட்டும் காத்துக் கொள்ள தமிழக முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள ஆட்சி மக்கள் நலனை காக்கும் ஆட்சி அல்ல. தங்கள் நலனை மட்டும் காக்கும் ஆட்சி என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றில் கூட தமிழக முதல்வர் தெளிவான முடிவை எடுக்கவில்லை. ஆளுங்கட்சியினர் என்ன நினைப்பில் ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 14-ந்தேதி தொடங்கி நேற்றோடு நிறைவடைந்துள்ளது.தமிழக மக்களின் பிரச்சினைகளை பற்றி எல்லாம் எந்தவொரு கவலையும் கொள்ளாமல் தங்கள் விருப்பத்திற்கேற்ப சர்வாதிகார போக்குடன் ஆளுங்கட்சியினர் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தி முடித்திருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருந்த சட்டசபை இன்று ஆளுங்கட்சியினர் நலனுக்கான இடமாக மாறி இருக்கிறது. சட்டமன்றத்தில் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போதும் அந்த விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று சொல்லாமல் மவுனம் காப்பதும், சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு தராமல் மறுக்கின்ற நிகழ்வுகளும்தான் நடந்துள்ளது.இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதோ வறுமையில் வாடுவதை போலவும், வேறு வருமானமே இல்லாதது போலவும் இப்போது கொடுக்கப்பட்டிருக்கின்ற சம்பள உயர்வை வைத்துதான் பிழைப்பு நடத்தப் போவது போலவும் சம்பள உயர்வு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதை மக்கள் நகைப்புடன் பார்க்கிறார்கள். விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறையினர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு என்பது ஏற்புடையதல்ல.
என்று அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *