எம்.எல்.ஏ. பதவிக்கு சொந்தம் கொண்டாடும் 3 புதிய நபர்கள் சட்டசபையில் மனு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்ட அதே பெயர் கொண்டவர்கள், தங்களுக்கும் நியமன எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என சட்டசபை செயலாளரிடம் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுவையில் அரசு சிபாரிசு செய்யாமலேயே 3 நியமன எம்.எல்.ஏ.க்களாக பாரதிய ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை மத்திய அரசு நியமித்தது.இந்த 3 பேருக்கும் சபாநாயகர் வைத்திலிங்கம் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் 3 பேர் பெயர் மட்டும் தான் உள்ளது. அவர்களின் பெற்றோர், முகவரி போன்ற எந்த விவரங்களும் இல்லை. எனவே, பதவி பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று கூறினார்.ஆனால், அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவரங்களை சபாநாயகருக்கு அனுப்பி அவர்களை எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார்.ஆனால், சபாநாயகர் அதை ஏற்க மறுத்துவிட்டார். கவர்னர் பதவி பிரமாணம் செய்தது செல்லாது என்றும் அறிவித்தார்.இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களின் அதே பெயர் கொண்ட 3 பேர் புதுவை சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்து எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வையுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளனர்லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்த சாமிநாதன், காக்காயந்தோப்பை சேர்ந்த சங்கர், முதலியார்பேட்டையை சேர்ந்த செல்வ கணபதி ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளனர்.அதில், மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக பரிந்துரை செய்துள்ள பெயர்களில் அவர்களின் தந்தை பெயரோ மற்ற விவரங்களோ இல்லை. எனவே, எங்களைத்தான் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து இருக்கிறார்கள் என கருதுகிறோம். எங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வையுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை பெற்று கொண்ட சட்டசபை செயலகம் இதற்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *